செய்திகள்

காரைக்குடியில் நகைக்கடை அதிபரிடம் ரூ.55 லட்சம் பறிமுதல்

Published On 2016-09-26 11:28 IST   |   Update On 2016-09-26 11:28:00 IST
காரைக்குடியில் ஆவணங்கள் இல்லாததால் நகைக்கடை அதிபரிடம் இருந்த ரூ.55 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி:

காரைக்குடியில் ஆவணங்கள் இல்லாததால் நகைக்கடை அதிபரிடம் இருந்த ரூ.55 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அம்மன் சன்னதி பகுதியைச் சர்ந்தவர் சபரிநாதன். இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். சென்னை சென்றிருந்த இவர், நேற்று நள்ளிரவு பஸ் மூலம் காரைக்குடி வந்து இறங்கினார்.

வீட்டிற்கு நடந்து சென்ற போது, காரைக்குடி வடக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சபரிநாதனிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் ரூ.55 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் அவரிடம் பணத்துக்குரிய ஆவணங்களை கேட்டுள்ளனர். சென்னையில் நகை விற்று பணத்தை கொண்டு வருவதாகவும் மேலும் ஆவணங்கள் தன்னிடம் தற்போது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார், பணத்தை பறிமுதல் செய்து ஆவணங்களை காண்பித்து வாங்கிச் செல்லுமாறு கூறினர். ஆவணம் கொண்டு வராவிட்டால் வருமானவரித்துறையிடம் பணம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.

Similar News