செய்திகள்
பள்ளத்தூரில் இன்று பெருமாள் கோவில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
பள்ளத்தூரில் கோவிலுக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் 3½ பவுன் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் பறித்துச் சென்றனர்.
காரைக்குடி:
கரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் நடுவீதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி காமாட்சி (வயது 60).
இன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால், காமாட்சி அந்த பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றார். அங்கு தரிசனம் முடித்துவிட்டு அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது 2 வாலிபர்கள் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென காமாட்சி மீது பாய்ந்து அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காமாட்சி, திருடன்...திருடன்... என கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அந்த வாலிபர்கள் மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். இதுகுறித்து பள்ளத்தூர் போலீசில் காமாட்சி புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.