செய்திகள்

பொன்னமராவதி ஊராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு

Published On 2016-09-20 16:37 IST   |   Update On 2016-09-20 16:37:00 IST
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

பொன்னமராவதி:

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒன்றிய ஆணையர் சதாசிவம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

ஊராட்சித்தலைவர் சோலையப்பன், முருகேசன், சண்முகம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதில் கிராம ஊராட்சி ஆணையர் பாஸ்கர், ஒன்றிய பொறியாளர் கதிரேசன், துணைஆணையர் வெள்ளைச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் 75ஆயிரத்து 236வாக்காளர்கள் உள்ளனர். இதில் 37ஆயிரத்து349ஆண் வாக்காளர்களும், 37ஆயிரத்து887பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த ஒன்றியத்தில் இரண்டு மாவட்டக்கவுன்சிலர், 16ஒன்றியக்கவுன்சிலர், 42கிராம ஊராட்சித்தலைவர், 291கிராமஊராட்சி உறுப்பினர் என351பதவிகளுக்கு உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்கு இந்த வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News