செய்திகள்

தேவகோட்டை அருகே 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் உள்பட 2 பேர் கைது

Published On 2016-09-19 15:11 IST   |   Update On 2016-09-19 15:11:00 IST
தேவகோட்டை அருகே 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட வலனை கிராமத்தைச்சேர்ந்தவர்கள் அர்ச்சுணன் (வயது60), கார்த்திக் ராஜா. இவர்கள் நேற்று அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்த 8 வயதுள்ள 5 சிறுமிகளை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராது ராஜீ விசாரணை நடத்தி 5 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த அர்ச்சுணன், கார்த்திக் ராஜா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News