செய்திகள்
திருமயம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் நகை திருட்டு
திருமயம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் நகையை பறித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெ.கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் சென்னையில் வசித்து வருகிறார். தனது குல தெய்வமான பூங்காவன அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். கோவில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருந்த போது சிதம்பரம் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை யாரோ பறித்து சென்று விட்டனர்.
இதே போல் வெ.கோட்டையூர் அருகே உள்ள தேவப்படியை சேர்ந்த பழனியம்மாள் என்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலியை யாரோ பறித்து சென்று விட்டனர். இது குறித்து திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரையடுத்து 13 சவரன் நகையை திருடிசென்ற மர்ம நபர்கள் குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.