செய்திகள்

சிவகங்கை அருகே மதகுபட்டியில் வீட்டின் கதவை திறந்து நகை கொள்ளை

Published On 2016-09-12 14:45 IST   |   Update On 2016-09-12 14:45:00 IST
சிவகங்கை அருகே மதகு பட்டியில் வீட்டின் கதவை திறந்து 4 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிவகங்கை:

சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட நாமலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜா. இவரது மனைவி எழிலரசி. நேற்று இவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை அருகிலேயே மறைவான இடத்தில் வைத்து விட்டு வெளியே சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமி சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்தான். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 4 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினான்.

வீடு திரும்பிய எழிலரசி கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மதகுபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலா மணி வழக்குப்பதிவு செய்து நகை திருடியவனை தேடி வருகின்றார்.

Similar News