செய்திகள்

காரைக்குடி அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

Published On 2016-09-11 16:15 IST   |   Update On 2016-09-11 16:15:00 IST
மொபட்டில் மகனுடன் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்த வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகர் நோன்பு பொட்டல் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 30).

நேற்று மாலை இவர், தனது மகனுடன் காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியில் உள்ள தாயாரைப் பார்ப்பதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார். பீ.பீ. நகர் என்ற இடத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த வாலிபர்களில் ஒருவன் மகாலட்சுமி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துக் கொண்டான். இதில் நிலைகுலைந்த அவர், சத்தம் போடுவதற்குள் 2 வாலிபர்களும் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

நகையை பறிகொடுத்த மகாலட்சுமி, இதுகுறித்து காரைக்குடி டவுன் போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ் பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து நகை பறித்த வாலிபர்களை தேடி வருகிறார்.

Similar News