செய்திகள்

புதுக்கோட்டையில் அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி ஆலோசனை கூட்டம்

Published On 2016-09-04 22:10 IST   |   Update On 2016-09-04 22:10:00 IST
புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்று ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் பி.கே.வைரமுத்து, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநிலச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.ஏ.ரெத்தினசபாபதி, நார்த்தாமலை பா.ஆறுமுகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கினர்.

மேலும் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ராஜசேகர், நகரச் செயலாளர் பாஸ்கர், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி தலைவர் கார்த்திக் தொண்டைமான், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் செல்லத்துரை, நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.சேட், அரிமழம் யூனியன் துணைத் தலைவர் கடையக்குடி திலகர், மாவட்ட கழக பொருளாளா கருப்பையா, கறம்பக்குடி ஒன்றியச் செயலாளர் சரவணக்குமார், பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் அழகு சுப்பையா, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் வீரமணி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராஜ நாயகம், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் சுபத்ரா தேவி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் மாசிலாமணி, முன்னாள் கழக அமைப்புச் செயலாளர் கே.ஆர்.கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் டி.வி.சி.ராசு, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News