செய்திகள்
குடும்ப அட்டையில் உள்ள குறைபாடுகளை பொதுமக்கள் தெரிவித்து பயன்பெறலாம்: கலெக்டர் அறிவிப்பு
குடும்ப அட்டையில் உள்ள குறைபாடுகளை பொதுமக்கள் தெரிவித்து பயன்பெறலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் 2-ஆம் வாரத்தில் (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்த கிராமத்தில் உள்ள குடும்ப அட்டைகள், நியாயவிலைக் கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் பொருட்டு தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில் தொடர்புடைய கூட்டுறவுச் சங்க தனி அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நுகர்வோர் குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரால், துணை ஆட்சியர் நிலையில் நியமிக்கப்படும் அலுவலர் ஒருவர் பார்வையாளராக இருப்பார்.
புதுக்கோட்டை வட்டம் கவிநாடு கிழக்கு கிராமம், ஆலங்குடி வட்டம் வெண்ணாவல்குடி கிராமம், திருமயம் வட்டம் கீழாநிலைகோட்டை கிராமம், குளத்தூர் வட்டம் மேலப்புதுவயல் கிராமம், இலுப்பூர் வட்டம் தச்சம்பட்டி கிராமம், கந்தர்வகோட்டை வட்டம் நத்தமாடிப்பட்டி கிராமம், அறந்தாங்கி வட்டம் வைரிவயல் கிராமம், ஆவுடையார்கோவில் வட்டம் திருப்புனவாசல் கிராமம், மணமேல்குடி வட்டம் ஏனாதி கிராமம், பொன்னமராவதி வட்டம் கொன்னையன்பட்டி கிராமம், கறம்பக்குடி வட்டம் கோட்டைக்காடு கிராமம், விராலிமலை வட்டம் கோமங்கலம் கிராமம்.
இங்கு நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள் குறித்து எடுத்துக்கூறி பயன் பெறலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.