செய்திகள்
புதுக்கோட்டையில் தூய்மை பணி: டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டு குளத்தை சுத்தம் செய்த ஊர்காவல் படையினர்
புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் பொருட்டு 100 சதவீத துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் பொருட்டு 100 சதவீத துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் கடந்த மாதம்(ஆகஸ்டு) 29–ந் தேதி தொடங்கியது. அன்றைய நாளில் இருந்து பல்வேறு இடங்களில் துப்புரவு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சி பிருந்தாவனம் அருகே உள்ள பிள்ளையார்குளத்தில் நேற்று தூய்மை பணி நடைபெற்றது. இதில் நகராட்சியுடன், ஊர்காவல் படை ஏரியா கமாண்டர் மணிவண்ணன் தலைமையில் ஊர்காவல் படையினர் 50 பேர் குளத்தில் உள்ள முட்புதர்கள், குப்பைகளை அகற்றினர்.
இந்த பணி இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது.