செய்திகள்
ஆப்பக்கூடலில் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை
ஆப்பக்கூடலில் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் காமராஜ் காலனியை சேர்ந்தவர் குப்புசாமி விவசாய கூழி தொழிலாளி. இவரது மகள் தாரணி (வயது17).
தாரணி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் ஒழுங்காக பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்தாராம்.
இதனால் அவரது பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு தினமும் சென்று நன்றாக படியும்மா.. என்று கூறி வந்தார்கள்.
இந்த நிலையில் வழக்கம் போல் தாரணியின் பெற்றோர் விவசாய வேலைக்கு சென்று விட்டனர்.
அவர்கள் திரும்ப வீட்டுக்கு வந்த போது தாரணி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த அவர்கள் தாரணியை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தாரணி பரிதாபமாக இறந்தார்.
பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆப்பக்கூடலில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாரணியின் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுத காட்சி மனதை உருக்குவதாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.