செய்திகள்
முனியசாமி

ஆவின்பால் கலப்பட வழக்கு: தலைமறைவாக இருந்த டேங்கர் லாரி டிரைவர் கைது

Published On 2016-09-01 15:37 IST   |   Update On 2016-09-01 15:37:00 IST
ஆவின்பால் கலப்பட வழக்கில் தலைமறைவாக இருந்த டேங்கர் லாரி டிரைவரை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ஊரல் கிராமத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆவின் பாலில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் வைத்திய நாதன் உள்பட 26 பேர் மீது வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்கள் மீது விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி.போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வைத்திய நாதன் உள்பட 21 பேர் ஆஜரானார்கள். மீதமுள்ள 5 பேர் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி வருகிற 21-ந் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் முனியசாமி(42) தலைமறைவாக இருந்தார். தீவிர தேடுதல் வேட்டை நடத்தி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் நீதிபதி சுபா அன்புமணி முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News