செய்திகள்
கொடி கம்பத்தை நிமிர்த்தியபோது சாய்ந்தது: தே.மு.தி.க. பெண் நிர்வாகி உள்பட 6 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது
ஊரப்பாக்கத்தில் தே.மு.தி.க. கொடி கம்பத்தை நிமிர்த்தியபோது பெண் நிர்வாகி உள்பட 6 பேர் மீது மின்சாரம் பாய்ந்த சம்பவம் அப்பகுதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:
ஊரப்பாக்கம் டீ கடை பஸ் நிலையம் அருகே இன்று காலை விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு 70 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்ற தே.மு.தி.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அனகை முருகேசன் கட்சி கொடி ஏற்ற அங்கு வந்தார். அப்போது கொடி கம்பம் சிறிது சாய்ந்து இருந்தது.
அதனை நிமிர்த்த கட்சி நிர்வாகிகள் முயன்றனர். இதில் அருகில் இருந்த மின் வயரில் கொடி கம்பம் சாய்ந்தது.
மின்சாரம் பாய்ந்ததில் கொடி கம்பத்தை பிடித்து இருந்த கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.மூர்த்தி, ராஜேஷ், மகேந்திரன், சுதாகர், கேசவன், அனு ஆகிய 6 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதை பார்த்து கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மின்சாரம் தாக்கிய 6 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.