செய்திகள்

சூறை காற்றுடன் மாமல்லபுரத்தில் பலத்த மழை

Published On 2016-08-24 14:00 IST   |   Update On 2016-08-24 14:01:00 IST
சூறை காற்றுடன் மாமல்லபுரத்தில் பலத்த மழை பெய்தது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு பலத்த சூறைகாற்றுடன் சுமார் 2 மணிநேரம் கனமழை பெய்தது, இதில் கடம்பாடி, மணமை, வடகடம்பாடி, குளிப்பாந்தன்டலம், பெருமாள் ஏரி பகுதிகளில் வாழை மரங்கள் காற்றில் சாய்ந்தன. மாமல்லபுரத்தில் சாலையோரத்தில் இருந்த ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தது.

ஒத்தவாடைதெரு, கலங்கரை விளக்கம் சாலை, ஐந்துரதம், கிழக்குராஜ வீதி பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. ஸ்தலசயண பெருமாள் கோவில் வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

Similar News