செய்திகள்

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு நிதி உதவி

Published On 2016-08-16 17:58 IST   |   Update On 2016-08-16 17:58:00 IST
பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவியினை அமைச்சர் கே.டி.ராஜேந் திரபாலாஜி வழங்கினார்.

சிவகாசி:

சிவகாசி பகுதியில் உள்ள பாரதி நகரில் கடந்த மாதம் 2-ந்தேதி இரவு ஏற்பட்ட பட்டாசு வெடிவிபத்தில் தங்கவேல் (50), முத்தையன் (53), ஆல்வின் ஏபீல் சுவீகர் (37,) ஆத்தியப்பன் (38) ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த குடும்பங் களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம் ஆக மொத்தம் ரூ.6 லட்சத்தை தனது சொந்த நிதியிலிருந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் எம்.பி., ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, மாவட்ட பொருளாளர் ராஜவர்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News