செய்திகள்

வேதாரண்யம் அருகே மாதாகோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி

Published On 2016-08-06 22:55 IST   |   Update On 2016-08-06 22:55:00 IST
வேதாரண்யம் அருகே மாதாகோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்த வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா, வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம், கோவில்பத்து கிராமத்தில் மாதா கோவில் உள்ளது. இங்கு நள்ளிரவில் உண்டியலை கடப்பாரை கொண்டு 2 பேர் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து உள்ளனர்.

இதை பார்த்த பொதுமக்கள் சத்தம் போடவே அவர்கள் தப்பியோடினர். இதில் புஷ்பவனத்தை சேர்ந்த மணிமாறன் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Similar News