செய்திகள்

நாகை அருகே 2-வது திருமணம் செய்து கொண்ட கணவன்: முதல் மனைவி போலீசில் புகார்

Published On 2016-08-03 17:11 IST   |   Update On 2016-08-03 17:11:00 IST
நாகை அருகே 2-வது திருமணம் செய்து கொண்ட கணவன் குறித்து முதல் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் காடம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணையன் மகன் ஜெய்குமார்(வயது 36). இவரது மனைவி சாந்தி(32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் ஜெய்குமார் காடம்பாடி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த குமணன் மகள் கலாராணி (22) என்பவரை 2 வருடமாக காதலித்து வந்துள்ளார்.

மேலும் இருவரும் கடந்த மாதம் 27-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி காடம்பாடி அருகே உள்ள சித்தர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் வேளாங்கன்ணி கோவிலில் தங்கி இருந்து விட்டு கடந்த 1-ந் தேதி வீடு திரும்பினர்.

வீட்டிற்கு வந்த ஜெய்குமார் தனது முதல் மனைவி சாந்தியிடம் இதுகுறித்து நீ காவல் நிலையத்திலும், உறவினரிடமும் கூறக்கூடாது. மீறி கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் அவரது 2-வது மனைவி கலாராணியும் சாந்தியிடம் நான் யார்? எனது குடும்பத்தினர் யார்? என்று உனக்கு தெரியாது என்றும் இதுகுறித்து எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்றும் மிரட்டி உள்ளார்.

இது குறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் நாகை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபா வழக்கு பதிவு செய்து ஜெய்குமார், கலாராணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News