செய்திகள்

சீர்காழியில் 11-ந் தேதி மின்நிறுத்தம்

Published On 2016-08-03 16:45 IST   |   Update On 2016-08-03 16:45:00 IST
சீர்காழியில் 11-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீர்காழி:

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் சீர்காழி, தென்பாதி, வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலச்சாலை,

கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்பங்கூர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளுக்கு வருகிற 11-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் சந்தானகிருஷ்ணன் தெரிவித்தார்.

Similar News