செய்திகள்

நாகை அருகே தூக்கு போட்டு டிரைவர் தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2016-08-03 16:22 IST   |   Update On 2016-08-03 16:22:00 IST
நாகை அருகே குடும்ப தகராறு காணரமாக டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை அடுத்த கீவலூர் போலீஸ் சரகம் சேமங்கலம் 3-ம் வாய்க்கால் கரையை சேர்ந்தவர் சுகுமார் (வயது 40) டிரைவர். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன் சுகுமாருக்கு காலில் அடிபட்டது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சுகுமார் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து நாகை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News