செய்திகள்
மயிலாடுதுறையில் வாகனம் மோதி முதியவர் பலி
மயிலாடுதுறையில் வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை சின்னக்கடை தெருவில் சாலை ஓரம் தூங்கியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஏறியதில் படுகாயமடைந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவரை மீட்டு படுகாயமுற்றவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இறந்தவர்சுமார் 55 வயது மதிக்கத்தக்கவர் அவர் யார்? யார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.