செய்திகள்

பொன்னமராவதியில் பஸ் நிலையத்தில் காமராஜர் சிலை அமைக்க கோரிக்கை

Published On 2016-07-29 19:13 IST   |   Update On 2016-07-29 19:13:00 IST
பொன்னமராவதி பேரூந்து நிலையத்தில் காமராஜர் சிலை நிறுவி பேரூந்து நிலையத்தில் காமராஜர் பெயர் வைக்கவேண்டும் என இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

பொன்னமராவதி:

பொன்னமராவதி பேரூந்து நிலையத்தில் காமராஜர் சிலை நிறுவி பேரூந்து நிலையத்தில் காமராஜர் பெயர் வைக்கவேண்டும் என இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இளைஞர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் பாலமுரளி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

பொன்னமராவதி பேரூந்து நிலையம் காமராஜர் பேரூந்து நிலையம் என பெயர் வைக்கப்பட்டு பெயர் பலகை இருந்தது. ஆனால் இப்போது அந்த பெயர் இல்லை. எனவே காமராஜர் பேரூந்து நிலையப்பெயர் பலகையினை பேரூராட்சி வைக்க ஆவணசெய்யவேண்டும்.

மேலும் பொன்னமராவதி பேரூந்து நிலையத்தில் காமராஜர் சிலையினை வைக்க வேண்டும் எனவும் அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

Similar News