செய்திகள்

திருமயத்தில் அப்துல்கலாம் நினைவு தினம்: மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்

Published On 2016-07-28 18:54 IST   |   Update On 2016-07-28 18:54:00 IST
திருமயத்தில் அப்துல் கலாம் முதலாமாண்டு நினைவு தினத்தை யொட்டி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

திருமயம்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திருமயம் பேருந்து நிலையம் அருகே காமராஜர் சாலையில்  ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் படத்திற்கு மெளன அஞ்சலியும், மலர் தூவி மரியாதையும் செய்யப்பட்டது. 

பின்னர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஜே.எம்.ஜமால்தீன் கலந்து கொண்டு திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் சுமார் 110–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, பேனா மற்றும் பள்ளிக்கு டி.வி.டி. பிளேயர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்ற நண்பர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலர் எஸ்.ஜேம்ஸ், திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அருள் ஆரோக்கிய மேரி, உதவி ஆசிரியர்கள் ராஜி, ரவி, பாரதி, தேன்மொழி, இளவரசி, லெட்சுமி, சத்துணவு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News