செய்திகள்
காந்தி உலக மையம் சார்பில் புதுக்கோட்டையில் முப்பெரும் விழா
புதுக்கோட்டை காந்தி உலக மையத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
விழாவில் சிறப்பாக பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு நினைவுப் பரிசும், பாராட்டுச் சான்றிதலும் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வர் பரிமளாதேவிக்கு காந்தி உலக மையத்தின் சார்பில் நினைவுப் பரிசும், கேடயமும் வழங்கப்பட்டது. விழாவில் தொழில் அதிபர் எஸ்.வி.எஸ்.ஜெயக்குமார், விபத்து தடுப்பு சங்கத் தலைவர் மாருதி மோகன்ராஜ், டீம் மருத்துவமனை அதிபர் டாக்டர். சலீம், தொழில் அதிபர் பார்த்திபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.