செய்திகள்

ஈரோடு அருகே பெண் மீது தாக்குதல்

Published On 2016-07-25 18:13 IST   |   Update On 2016-07-25 18:13:00 IST
பெண் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு, காளிங்கராயன் பாளையம், மணக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(42).

இவருக்கும் இவரது கணவர் ராம்குமாருக்கும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டு கடந்த 8 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு பைரவி என்ற மகளும் உள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று லட்சுமி வீட்டில் இருந்தார். அப்போது கணவர் ராம்குமாரின் உறவினரும், அவரது மனைவியும் லட்சுமி வீட்டிற்கு வந்தனர்.

அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த உறவினரும், அவரது மனைவியும் சேர்ந்து லட்சுமியை கீழே தள்ளி காலால் எட்டி உதைத்தும் தாக்கினார்களாம்.

லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் இரண்டு பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News