செய்திகள்

திருமயம் அருகே பிளஸ்–2 மாணவியை காரில் கடத்திய கும்பல்

Published On 2016-07-17 17:03 IST   |   Update On 2016-07-17 17:03:00 IST
பிளஸ்–2 மாணவியை காரில் கடத்திய கும்பல் போலீசாரை கண்டதும் கீழே தள்ளி விட்டு தப்பியோடிவிட்டது.

திருமயம்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகள் பிரியங்கா. இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற போது பழந்தினாம்பட்டியை சேர்ந்த மாதவன் என்பவர் தனது 4 நண்பர்களுடன் சேர்ந்து பிரியங்காவை காரில் கடத்தி சென்று விட்டார்.

கார் சிவகங்கை மாவட்டம் நேமத்தான்பட்டி போலீஸ் சோதனைச்சாவடி அருகே செல்லும் போது, போலீசாரை கண்டதும் பிரியங்காவை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு தப்பி சென்று விட்டனர் .

இது குறித்து திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் தேடி வருகின்றனர்.

Similar News