செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி தாய்–மகள் படுகாயம்: வாலிபர் கைது
மோட்டார் சைக்கிள் மோதியதில் தாய், மகள் படுகாயம் அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா, கரியாப்பட்டினம் காவல் சரகம், தென்னம்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி சந்திரா (வயது 42). இவர் தனது மகள் திரிஷா (8) என்பவரை தனது சைக்கிளில் அழைத்து கொண்டு மெயின்ரோட்டில் சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த தேத்தாகுடி தெற்கு சுப்பிரமணியன் மகன் பாரதிராஜா (22) என்பவர் மோதியதில் சந்திராவும், திரிஷாவும் படுகாயமடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
இது குறித்து சந்திரா கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குபதிவு செய்து பாரதிராஜாவை கைது செய்தனர்.