செய்திகள்
நாகை அருகே மனைவிக்கு உடல் நிலை சரியில்லா கவலையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள முட்ட அரசபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வீரமணி (40). செங்கல் சூளை தொழிலாளி.
இவரது மனைவி சரஸ்வதி உடல் நலம் சரியில்லாததால் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை அழைத்து வர வீரமணி சென்ற போது உடல் நலம் சரியான பின்பு வருவதாக கூறி உள்ளார். இதனால் மனம் உடைந்த வீரமணி விஷம் குடித்து விட்டார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.