செய்திகள்

வேதாரண்யம் அருகே குடும்ப தகராறில் விவசாயி தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2016-06-30 16:47 IST   |   Update On 2016-06-30 16:47:00 IST
வேதாரண்யம் அருகே குடும்ப தகராறு காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர் ஆரிய கவுண்டர் காடு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (59) விவசாயி.

குடும்ப பிரச்சனை காரணமாக இவர் வி‌ஷம் குடித்தார். மயங்கி விழுந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இது குறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News