செய்திகள்

ஆதம்பாக்கத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2016-06-29 14:51 IST   |   Update On 2016-06-29 14:51:00 IST
ஆதம்பாக்கத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் பரஞ்சோதி. இவர் நேற்று காலை பிருந்தாவன் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது கே.கே.நகரை சேர்ந்த நாகூர்மீரான், ஆதம்பாக்கம் பரமேஸ்நகரை சேர்ந்த பிரசன்னகுமார் ஆகிய 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பரஞ்சோதியிடம் பணத்தை பறித்து தப்பி சென்றனர்.

ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் உதயகுமார். இவர் நேற்று கக்கன் பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்து இருந்தார். அப்போது ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்த வீரமணி, ரகு ஆகியோர் வந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி உதயகுமாரிடம் பணத்தை பறித்து சென்றனர்.

இந்த 2 வழக்குகள் குறித்து ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 4 பேரையும் கைது செய்தார்.

Similar News