செய்திகள்
காஞ்சீபுரத்தில் மழைநீரை அகற்ற கோரி பொதுமக்கள் மறியல்
காஞ்சீபுரத்தில் மழைநீரை அகற்ற கோரி நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு இடங்களிலும் பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக கழிவுநீருடன் மழை நீர் தேங்கி சாலையில் நிற்கிறது.
காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியில் கடந்த 3 நாட்களாக மழைநீர் வடியாததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாகினர். இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
இந்தநிலையில் நேற்று மாலை பெய்த கனமழையில் அப்பகுதியில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்தது. இதனால் இரவு 8 மணியளவில் அப்பகுதி மக்கள் கிழக்கு ராஜவீதி பகுதியில் மழைநீர் மற்றும் கழிவு நீரை அகற்ற கோரி திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் குடிநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.