செய்திகள்

சோழிங்கநல்லூர் அருகே 10-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் மாயம்

Published On 2016-06-28 14:22 IST   |   Update On 2016-06-28 14:22:00 IST
சோழிங்கநல்லூர் அருகே 10–ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவான்மியூர்:

சோழிங்கநல்லூரை அடுத்த நன்மங்கலம் இந்திராநகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் சுபஸ்ரீ (வயது 15) மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

நேற்ற காலை பள்ளிக்கு சென்ற சுபஸ்ரீ பின்னர் வீட்டுக்கு திரும்பிவரவில்லை. உறவினர்கள் தோழிகள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதே போல் அதே வகுப்பில் படிக்கும் மாணவிகள் மடிப்பாக்கம் தமிழரசி, வெள்ளக்கல் பவித்ரா ஆகியோரும் மாயமாகி இருப்பது தெரிந்தது.

ஒரே பள்ளியில் 3 மாணவிகள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பள்ளிக்கரணை , மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News