செய்திகள்
காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதல்: தொழிலாளி பலி
காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதலில் தொழிலாளி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டை இந்திராநகரை சேர்ந்தவர் ராஜி கூலித் தொழிலாளி. இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஐயம்பேட்டை பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராஜி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜி பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வாலாஜாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.