செய்திகள்
காஞ்சிபுரத்தில் மணல் திருட்டு: 5 பேர் கைது
காஞ்சிபுரத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் பாலாற்று படுகை பகுதிகளில் மணல் திருட்டு நடைபெறுவதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் பாலாற்றுபடுகை பகுதியில் திருட்டு தனமாக மாட்டு வண்டியில் மணல் கடத்திய மலையாங்குளம் பகுதிகளைச் சேர்ந்த சுந்தரராஜன், பூபாலன், முனியாண்டி, ரமேஷ், லோகநாதன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.