செய்திகள்
செம்பாக்கம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
செம்பாக்கம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் விஜயரங்கன், சுரேஷ் உள்பட 9 பேர் நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தாம்பரம்:
செம்பாக்கம் நகராட்சி கூட்டம் தலைவர் சாந்த குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முதல் அமைச்சராக 6-வது முறையாக பொறுப் பேற்ற ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவிப்பது உள்பட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது கவுன்சிலர் விஜயரங்கன் (தி.மு.க.) நகராட்சி தலைவரிடம் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கும் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். அது ஏற்கப்படவில்லை.
இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர்கள் விஜயரங்கன், சுரேஷ் உள்பட 9 பேர் நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.