செய்திகள்
கேளம்பாக்கம் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து கொலை: நண்பர்கள் 3 பேர் கைது
கேளம்பாக்கம் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்போரூர்:
கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் உள்ள வயல்வெளியில் இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மார்பிலும் கத்திக்குத்து விழுந்து இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கேளம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அன்பு மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் கொலை செய்யப்பட்டது சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த ராஜா என்ற சதீஷ் என்பது தெரிந்தது. இவர் மீது போலீஸ் நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜாவை தையூரை சேர்ந்த நண்பர்கள் நாகராஜ், வெற்றிமன்னன், காரப்பாக்கத்தை சேர்ந்த மாடுமணி ஆகிய 3 பேர் கொலை செய்திருப்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்கள் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-
ஒரு திருட்டு வழக்கில் நாகராஜை போலீசில் சதீஷ் சிக்க வைத்தார். எனவே, அவரை பழிவாங்க திட்டமிட்டோம். நேற்று இரவு சதீஷ் கேளம்பாக்கத்தில் உள்ள மதுக்கடையில் மதுஅருந்த வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து நாங்கள் அங்கு சென்று, சதீஷிடம் நைசாக பேசி வயல்வெளிக்கு அழைத்து சென்றோம். அங்கு மது அருந்திக் கொண்டிருந்த போது, போலீசில் சிக்க வைத்தது குறித்து கேட்டோம். இதில் எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நாங்கள் 3 பேரும் சதீஷை கழுத்தை அறுத்தும், மார்பில் கத்தியால் குத்தியும் கொன்றோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
கொள்ளையடித்த பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததாக என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.