செய்திகள்

தாம்பரம் ரெயில் நிலையத்தில் வாலிபரை தாக்கி நகையை பறித்த கும்பல்

Published On 2016-06-21 14:34 IST   |   Update On 2016-06-21 14:34:00 IST
தாம்பரம் ரெயில் நிலையத்தில் வாலிபரை தாக்கி நகையை பறித்த கும்பலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

கூடுவாஞ்சேரியை அடுத்த காட்டாங்கொளத்தூரை சேர்ந்தவர் ரமேஷ். மேற்கு தாம்பரம் மல்லிகா நகரில் உள்ள ஒரு துணிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வீட்டுக்கு செல்ல தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். தண்டவாளத்தையொட்டி இருட்டான பகுதியில் நடந்து சென்றபோது 3 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. இரும்பு கம்பியால் தாக்கி ஒரு பவுன் தங்க செயின், ரூ.1000, செல்போனை பறித்து சென்று விட்டனர்.

படுகாயம் அடைந்த ரமேசை ரெயில்வே போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருட்டான பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் பயணிகள் பீதி அடைந்து உள்ளனர். இதில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News