செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே கார் மோதி முதியவர் படுகாயம்
ஜெயங்கொண்டம் அருகே கார்மோதி ஸ்கூட்டியில் சென்றவர் படுகாயமடைந்தார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (65). இவர் நேற்று முன்தினம் ஜெயங்கொண்டம் கடைவீதிக்கு சென்றுவிட்டு ஊருக்கு தனது ஸ்கூட்டியில் சென்றார். அப்போது பின்னால் வந்த கார் மோதியது.
இதில் வடிவேல் படுகாயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து வடிவேலின் மனைவி கஸ்தூரி ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் செல்லமுத்து வழக்குபதிந்து கார் டிரைவர் விருத்தாசலம் லூகாஸ் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் எபிநேசர் (42) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.