செய்திகள்

அரியலூரில் ரெயில் நிலையத்தை இணைக்கும் புதிய சாலை பணிகள்: கலெக்டர் ஆய்வு

Published On 2016-06-16 17:02 IST   |   Update On 2016-06-16 17:02:00 IST
அரியலூர் மாவட்டம், அரியலூர் இரயில் நிலையத்தை இணைக்க ஏதுவாக நெடுஞ்சாலைத் துறை மூலம் 100 மீட்டர் அகலத்தில் ஒரு வழிப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு, அடிப்படை பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
அரியலூர்:

அரியலூர் புறவழிசாலையிலிருந்து இரயில் நிலையத்தினை இணைக்கும் புதிய இணைப்பு சாலையினை புறவழி சாலையில் இருந்து அரியலூர் கோவிந்தபுரம் சாலையில் இணைக்கும் சுமார் 100 மீட்டர் ஒரு வழிப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் புதிய பாதை சீரமைக்கும் பொருட்டு அங்குள்ள முட்புதற்களை உடனடியாக அகற்றி சாலை அமைக்க ஆயத்த பணிகளை தொடங்க உடனடியாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பணிகளை நேரில் பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரஸ்வதி கணேசன், கோட்டாட்சியர் மோகனராஜன், செயற் பொறியாளர் செந்தில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், வட்டாட்சியர் அமுதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கபிலன், சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News