செய்திகள்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: கலெக்டர் அறிவிப்பு
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம் வழங்கப்படும் என்று அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.
அரியலூர்:
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும்தொழில் நிறுவனங்கள் துறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதன் மூலம் தொடங்க உள்ள தொழில்களில் உற்பத்தி பிரிவில் ரூ.5 லட்சம் வரையிலும், சேவைப்பிரிவில் ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரங்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும். கடன் பெற மாவட்டத் தொழில் மைய பொது மேலாளரைக் தலைவராகக் கொண்ட தேர்வுக்குழு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக கணக்கிட்டு அதிகபட்சமாக ரூ.125000 ஆயிரம் வரை மாவட்ட தொழில் மையம் வழங்கும்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்கள், 18 முதல் 45 வயது வரையிலும் இருக்கலாம். மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.150000 வரை இருக்கலாம்.
திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவிதமும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், மகளிர் மற்றும் அரவாணிகள் 5 சதவீதமும் தமது பங்காக செலுத்த வேண்டும். நேரடியான விவசாயம் தவிர பொருளாதார அடிப்படையில் லாபகரமான தொழில்கள் தொடங்கலாம்.
அரியலூர் மாவட்டத்திற்கு 2016-17 ம் நிதியாண்டில் 95 நபர்கள் பயன்பெற ரூ.46.875 லட்சம் மானியம் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் கேட்டு கொண்டுள்ளார்.