செய்திகள்
ஜெயங்கொண்டம அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
ஜெயங்கொண்டம அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சரவணன் ( வயது 39). இவர் சேவகத்தெருவில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது ஜெயங்கொண்டம் மேட்டுத் தெருவைசசேர்ந்த விஜயகுமார் (50) என்பவர் தன்னிடம் உள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகளை வாங்கச்சொல்லி மிரட்டினாராம்.
இதுகுறித்து சரவணன் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் செல்லமுத்து வழக்கு பதிந்து விஜயகுமாரை கைது செய்து விசாரித்து வருகிறார்.