செய்திகள்

பா.ம.க. தேர்தல் அறிக்கை தமிழகத்தின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

Published On 2016-05-07 08:07 IST   |   Update On 2016-05-07 13:55:00 IST
இலவச திட்டங்கள் வளர்ச்சிக்கு உதவாது என்றும், பா.ம.க. தேர்தல் அறிக்கை தமிழகத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை :

இலவச திட்டங்கள் வளர்ச்சிக்கு உதவாது என்றும், பா.ம.க. தேர்தல் அறிக்கை தமிழகத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து, பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தின் பொருளாதார நிலை தான் மிகவும் மோசமாக உள்ளது. இத்தகைய சூழலில் இலவசத் திட்டங்களை மட்டும் அறிவித்து செயல்படுத்துவது வளர்ச்சிக்கு உதவாது. மாறாக, இப்போது தமிழகம் சிக்கியுள்ள கடன் வலையில் இருந்து மீண்டெழுந்து உபரி பொருளாதார மாநிலமாக முன்னேறுவதற்குரிய அனைத்து வாய்ப்புகளையும் இந்த இலவசத் திட்டங்கள் பறித்துவிடும்.

பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க திட்டங்களை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டிப்போட்டு காப்பியடித்திருக்கின்றன. பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News