செய்திகள்

மானாமதுரை அருகே கோஷ்டி மோதல்: 9 பேர் கைது

Published On 2016-04-03 20:25 IST   |   Update On 2016-04-03 20:25:00 IST
மானாமதுரை அருகே கோஷ்டி மோதலில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானாமதுரை:

மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் கார்த்திக் (வயது 19). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் சாலையில் செல்போன் பேசியபடி நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த விஜய் (19) அவரை ஓரமாக செல்லுமாறு கூறியுள்ளார்.

அதற்கு கார்த்திக் ஓரமாக செல்ல முடியாது என்று தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் இருதரப்பினரும் கோஷ்டியாக மோதிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த மானாமதுரை போலீசார் அங்கு விரைந்து சென்று கோஷ்டி மோதலில் ஈடுபட்ட இருதரப்பைச் சேர்ந்த கார்த்திக், கலைவாணன், விஜயகுமார், செல்வகுமார், சிவகுமார், ராஜா, சூர்யா, அய்யாச்சாமி, முத்துகுமார் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News