உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட வழிப்பறி கொள்ளையர்கள்.

திண்டுக்கல் அருகே நள்ளிரவில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் சிக்கினர்

Published On 2023-10-20 13:20 IST   |   Update On 2023-10-20 13:20:00 IST
  • மர்மநபர்கள் அடுத்தடுத்து 2 பேரிடம் நகை, பணம், செல்போனை பறித்ததை பார்த்த அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் சத்தம் போட்டனர்.
  • போலீசார் ரோந்து பணியே மேற்கொள்ளாத நிலையில் பொது மக்களே சுற்றிவளைத்து பிடித்ததால் 2 பேர் சிக்கியுள்ளனர்.

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகில் உள்ள சென்னம நாயக்க ன்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார்(32). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகைகடை அதிபரிடம் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். நேற்றிரவு பணியை முடித்துவிட்டு இரவு 11 மணிக்குமேல் தன்வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

கரூர் பைபாஸ் சாலையில் அஞ்சலிரவுண்டானா அருகே வந்தபோது தனது பைக்கை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரை கத்தி முனையில் தாக்கி பணம் மற்றும் செல்போனை கேட்டு மிரட்டினர்.

மேலும் அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கசங்கிலி, செல்போன் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டனர். அதன்பிறகு சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரையும் மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்தனர். அடுத்தடுத்து 2 பேரிடம் நகை, பணம், செல்போனை பறித்ததை பார்த்த அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் சத்தம் போட்டனர்.

இதேபோல் பூதிப்புரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஓடிவந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை விரட்டிச்சென்றனர். அதில் ஒருவர் தப்பிஓட மற்ற 2 பேரையும் பிடித்து கொண்டனர். அவர்கள் பாலதிருப்பதியை சேர்ந்த சதீஸ்(18), நவீன்(19) என தெரியவந்தது. அவர்களுக்கு தர்மஅடி கொடுத்து தாடிக்கொம்பு போலீ சாருக்கு தகவல் தெரிவித்த னர்.

போலீசார் அவர்களை விசாரணைக்காக அழைத்து ச்சென்றனர். இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருபவர்களை யும், தனியாக நடந்து செல்பவர்களையும் குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. போலீசார் ரோந்து பணியே மேற்கொ ள்ளாத நிலையில் பொது மக்களே சுற்றிவளைத்து பிடித்ததால் 2 பேர் சிக்கியுள்ளனர்.

இதேபோல மேலும் பல வழிப்பறிகும்பல் நகரின்பல்வேறு பகுதிகளில் சுற்றி வருகின்றனர். பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் இதுபோன்ற வழிப்பறி கொள்ளை யர்களை போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News