உள்ளூர் செய்திகள்

சிறுவர்களை பணியமர்த்திய 2 கடைகளுக்கு அபராதம்

Published On 2023-02-11 09:30 GMT   |   Update On 2023-02-11 09:30 GMT
  • ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
  • 13 வயது சிறுவன் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது.

ஊட்டி

குன்னூர் மார்க்கெட் பகுதியில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் (அமலாக்கம்) சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மலர் அங்காடியில் 13 வயது சிறுவன் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது. உடனே அந்த சிறுவன் மீட்கப்பட்டான். இதுகுறித்து குன்னூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சிறுவனை பணிக்கு அமர்த்திய மலர் அங்காடி உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதேபோன்று ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் 16 வயது சிறுவன் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. அந்த சிறுவனை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மீட்டனர். மேலும் கலெக்டருக்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அந்த ஓட்டலுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News