உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவிகள் 2 பேர் மாயம்

Published On 2023-05-07 15:27 IST   |   Update On 2023-05-07 15:27:00 IST
  • கோடை விடுமுறைக்காக ஈரோட்டில் உள்ள தனது அக்கா வீட்டில் சென்று இருந்து வந்தார்.
  • மாணவியின் தாய் பேருந்து நிலையத்தின் பல்வேறு பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை.

தருமபுரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள செங்கோடி சின்ன அள்ளி பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் ராயக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கோடை விடுமுறைக்காக ஈரோட்டில் உள்ள தனது அக்கா வீட்டில் சென்று இருந்து வந்தார்.

சம்பவத்தன்று சொந்த ஊருக்கு மாணவியும், இவரது தாயும் தருமபுரி பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.

அப்போது கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற மாணவி மாயமானார்.

மாணவியின் தாய் பேருந்து நிலையத்தின் பல்வேறு பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து தருமபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

அதேபோல் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள செல்லூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவருடைய தாய் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருடைய தாயுடன் திருப்பூரில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் மாணவி 11-ம் வகுப்பு படித்து வந்தார். ேகாடை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த சிறுமி திடீரென காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News