உள்ளூர் செய்திகள்

சாராயம் கடத்தியதாக கைது செய்யப்பட்ட வாலிபர்களை படத்தில் காணலாம்.

சங்கராபுரம் அருகே லாரி டியூப்பில் சாராயம் கடத்திய 2 பேர் கைது

Published On 2022-10-22 14:24 IST   |   Update On 2022-10-22 14:24:00 IST
  • சங்கராபுரம் அருகே லாரி டியூப்பில் சாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • 500 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலு க்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கி ள்களையும் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் புதுப்பட்டு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் மூட்டைகளுடன் வந்த 4 வாலிபர்களை போலீசார் வழிமறித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் மூட்டைகளை போட்டு விட்டு 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே அவர்களை விடாமல் போலீசார் துரத்தி சென்றனர். இதில் 2 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் சேராப்பட்டு ஏரிக்கரை கிராமத்தை சேர்ந்த செல்வமணி (வயது 21), விக்னேஷ் (18) என்பதும் தப்பி ஒடியவர்கள் சேராப்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்த கார்த்திக்(25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பதும் தெரிய வந்தது. இவர்கள் சேராப்பட்டு பகுதியில் இருந்து லாரி டியூப்களில் சாராயத்தை ஊற்றி பின்னர் அவற்றை சாக்குபையில் மூட்டையாக கட்டி கடத்தி வந்ததுள்ளனர். இதையடுத்து செல்வமணி, விக்னேசை கைது செய்த போலீசார் கடத்தி வரப்பட்ட 500 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலு க்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஏழுமலை, கார்த்திக் 2 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News