உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2பேர் கைது - ஒருவருக்கு வலைவீச்சு

Published On 2022-11-10 15:09 IST   |   Update On 2022-11-10 15:09:00 IST
  • களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் மஞ்சுவிளை பகுதியில் ரோந்து சென்றனர்
  • 60 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

களக்காடு:

களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் மஞ்சுவிளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 3 பேர் சாக்கு பையுடன் நின்று கொண்டு, சிலருக்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர். இருப்பினும் போலீசார் விரட்டி சென்று 2 பேரை பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் மஞ்சுவிளை தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராஜ் மகன் வினித்பாபு (25), திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த நைனா முகம்மது (63) என்பதும், தப்பிஓடியது மஞ்சுவிளையை சேர்ந்த மரியதாஸ் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்கள் புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 60 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மரியதாசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News