கோப்பு படம்
தேனி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்
- கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- புகாரின் பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் போடி ரங்கநாதபுரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சந்தீப் (வயது 23). இவர் கோவையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.
பின்னர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மாயமானார். செல்போன் மூலம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் கிடைக்கவில்லை. இது குறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
ஜெயமங்கலம் அருகே உள்ள மேல்மங்கலம் கீழத் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மகள் வினோதினி (19). இவர் தாமரைக்குளத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை ஜெமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.