உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஜெயமங்கலத்தில் செவிலியர் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2022-10-28 10:17 IST   |   Update On 2022-10-28 10:17:00 IST
  • திருமணத்தில் விரும்பம் இல்லாத நிலையில் நர்ஸ் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் சிந்துவம்பட்டி காலனி தெருவைச் சேர்ந்த பிச்சை மணி மகள் ரமணீஸ்வரி (வயது 28). இவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

ஆனால் தனக்கு திருமணம் தற்போதைக்கு வேண்டாம் என அவர் கூறி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி கலைஞர் காலனி தெருவைச் சேர்ந்த சங்கரமூர்த்தி மகன் சங்கரபாண்டி (20). இவர் ஜெயமங்கலத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். சம்பவத்தன்று ஜெயமங்கலம் ரைஸ்மில் தெருவில் உள்ள அவரது அக்கா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News