உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனி அருகே கோர்ட்டு ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2023-06-05 12:26 IST   |   Update On 2023-06-05 12:26:00 IST
  • மனைவி கோபித்துக் கொண்டு மதுரையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டதால் அவர் விஷம் குடித்து மயங்கியவரை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
  • அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே அல்லிநகரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது33). இவர் அபிராமி (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கார்த்திகேயன் தேனி மாவட்ட கோர்ட்டில் சுகாதார தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடன் வாங்கி மது குடித்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் சம்பள பணத்தை வீட்டில் கொடுக்காததால் அபிராமி கோபித்துக் கொண்டு மதுரையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கார்த்திகேயன் விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் உயிரிழந்தார். இது குறித்து தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சமயன் (26). இவர் வேலைக்கு செல்லாமல் ஆதரவின்றி சுற்றி திரிந்து ள்ளார். இந்த நிலையில் காஞ்சிமரத்துறை- வேளங்காடு வனத்துறை சாலையில் உள்ள தோட்ட த்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குமுளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News